உண்மைகள் அறியாமல்
உணர்வுகளை உணராமல்
புத்தி ஜீவிகள் நாமென
பிதற்றும் மனிதன்
ஆத்திரம் வரும் வேளையில்
அடுத்தவனை மரம் எனத்
திட்டித் தீர்க்கின்றான்..!
மரம் என்ன கேவலமா ?
மனிதனை விட
உயர்ந்தது மரம்.
உயிரும் உணர்வும்
கொண்டது மரம்.
நேயம் கொண்ட
இனிய ஜீவி மரம்.
பயன் தரும் பண்புகள்
நிறைந்தது மரம்.
வாழும் போதும்
வாழ்ந்து முடிந்தாலும்
வீணாய்ப் போவதில்லை
மாசற்றது மரம்.
மரம் செத்தால் உரம்.
நாம் செத்தால் சவம்.!
கட்டில் தொட்டில்
தொன்று தொட்டு
தொலையாத வாழ்வுக்கு
வரம் என்றால் மரம்.
நிதானாமாகச் சொல்லுங்கள்
மனிதனும் மரமும்
ஒன்றாகுமா! அதன்
சிறப்பினை வென்றாகுமா!,?
மரங்களுக்கும் மனமுண்டு.
காதலுண்டு காமமுண்டு
மோகமுண்டு கற்பமுண்டு.
பிரசவமுண்டு. பிள்ளையுண்டு.
இதயமுண்டு. இரக்கமுண்டு.
பிராணவாயு தயாரிக்கும்
ஆலையுண்டு. சோலாப்
பவரில் உணவு தயாரிக்கும்
விஞ்ஞான ஆற்றலுண்டு.
செத்தும் வாழும் மரம்;;!
செத்ததும் நாறும் நாம்
நாவை அடக்கலாமே..!