தனது ஸ்மார்ட் கைப்பேசியின் விலையை அதிரடியாகக் குறைத்தது பேஸ்புக்

கூகுள் நிறுவனமானது அண்மையில் Google Nexus 5X எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.

அத்துடன் அதன் விலையை 379 டொலர்கள் என நிர்ணயம் செய்திருந்தது.

எனினும் இக் கைப்பேசி மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பினை பெற்றிராத நிலையில் அதன் விலையை குறைத்துள்ளது.

இதன்படி 329 டொலர் பெறுமதியில் தற்போது இக் கைப்பேசியினை கொள்வனவு செய்ய முடியும்.

Nexus 5X கைப்பேசி.2 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution கொண்டதுமான தொடுதிரை, Qualcomm Snapdragon 808 Processor, இயங்குதளமாக Android 6.0 Marshmallow என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர பிரதான நினைவகமாக 2GB RAM, 32GB அல்லது 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றுடன் 12.3 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.