வெப்பமயமாதலால் எவரெஸ்ட் பனிமலை உருகும் அபாயம்

உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் இமயமலையில் உள்ளது. பனியால் மூடப்பட்ட இந்த எவரெஸ்ட் சிகரம் 8,844 மீட்டர் உயரம் கொண்டது.

எவரெஸ்ட் சிகரத்தை திபெத், பீடபூமியில் குயோ மோலாக்மா என்றழைக்கின்றனர். இதுகுறித்து ஹுனான் பல்கலைக்கழகத்தின் சீன அறிவியல் அகடமியும், குயோமோ லாக்மா பனிசிறுத்தை சரணாலய மையமும் இணைந்து ஆய்வு நடத்தினார்கள்.

இதில் பருவநிலை மாற்றம் காரணமாக எவரெஸ்ட் சிகரம் வெப்பமயமாகி வருவது தெரியவந்தது. இதனால் எவரெஸ்ட் பனிமலை உருகி அதன் அளவு சுருங்கி வருவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திபெத்தில் 20 ஆம் நூற்றாண்டில் 1990 ஆம் ஆண்டில் வெப்பமயம் தொடங்குகிறது.

அதில் இருந்து திபெத்தில் உள்ள இமயமலையில் பனி உருக தொடங்கியது. அங்குள்ள கரகோர்ணம், வெஸ்டர்ன் குன்லம் மாகாணங்களில் உருகும் தன்மை அதிக அளவில் ஏற்பட்டது.

இதன் காரணமாக திபெத்தில் ஏரிகள் பல மடங்கு பெருகியுள்ளன. 1970 ஆம் ஆண்டுகளில் 1081 ஏரிகள் இருந்தன. பின்னர் 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தற்போது 80 சதவீதம் ஏரிகள் அதிகரித்துள்ளன.

எனவே திபெத்தில் வனப்பகுதி அதிக அளவில் பரவியுள்ளது. கடந்த 1997 ஆம் ஆண்டில் 72,90000 ஹெக்டேயராக இருந்த வனப்பகுதி 2013 ஆம் ஆண்டில் 226 கோடி ஹெக்டேயராக உயர்ந்துள்ளது.