உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்டும் சவுதி அரேபியா

கட்டிடம்இதுவரை காலமும் டுபாயிலுள்ள புர்ஜ்கலியா என்ற கட்டிடமே உலகிலே மிக உயரமான கட்டிடமாக காணப்படுகின்றது. இது 2700 அடி உயரம் கொண்டது. இதற்கு போட்டியாக உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் உயரம் 3280 அடியாக காணப்படுவதுடன், 200 மாடிகளைக் கொண்டதாகவும் அமைக்கப்டவுள்ளது. அமைக்கப்படும் புதிய கட்டடம் அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டடத்தை விட 2 மடங்கு உயரமாகும்.

இக்கட்டிடம் செங்கடல் துறைமுக நகரமான ஜிட்டாவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான செலவாக ரூ.7920 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் கட்டுமான வேலைகள் வருகிற 2020 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்படும்.