தேயிலையின் விலையில் அதிகரிப்பு

தேயிலையின் விலை மீளவும் உயர்வடைந்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ தேயிலையின் விலை 422 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாக அமைச்சின் செயளாலர் உபால் மாரசிங்க தெரிவித்துள்ளார் .

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு கிலோ தேயிலையின் விலை 390 ரூபாவாக காணப்பட்ட அதே வேளை தேயிலையின் விலையானது எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் 430 ரூபா வரை அதிகரிக்க கூடும என அமைச்சின் செயலாளர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார் .

தேயிலை விற்பனையில் அரசு தலையிட்டு செய்து அதன் விலை குறித்து தீர்மானம் ஒன்றை முன்வைத்ததை அடுத்தே தேயிலையின் விலை உயர்வடைந்துள்ளது.

எவ்வாறாயினும் தேயிலையை சந்தையில் இருந்து கொவனவு செய்வதற்கு அரசினால் 9 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத் தொழில் அமைச்சின்செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார் .