24 இந்தியமீனவர் இலங்கை கடற்படையினரால் கைது

தமிழ்நாட்டைச்சேர்ந்த 24 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடல் பிரதேசத்தினுள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்கு நீரிணை பகுதியில், கச்சைதீவு கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மற்றும் சிலரை அங்கிருந்து விரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3,000 மீனவர்கள் 600 படகுகளில் இவ்வாறு வந்துள்ளதோடு, இலங்கை கடற்படையினரின் சுமார் 10 கண்காணிப்பு படகு மற்றும் கடல் சைக்கிள்கள் அவர்களை குறித்த இடத்திலிருந்து செல்லுமாறு உத்தரவிட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம், மற்றும் மண்டபம் பகுதியை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த 24 பேரும் தலைமன்னார் முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி 19 இந்திய மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதோடு. ஒக்டோபர் 02ஆம் திகதி 07 பேரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.