மைலோ கிண்ண உதைபந்தாட்டப் போட்டி: கரணவாய் கொலின்ஸ் விளையாட்டு மைதானத்தில்

மைலோ கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் வடமராட்சி உதைபந்தாட்ட லீக் அணிகளுக்கிடையிலான ஆட்டங்கள் இன்று முதல் கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றன.

அதில் இன்று நடைபெற்ற ஆட்டங்களில் வதிரி பொமர்ஸ் விளையாட்டுக்கழகம் 2:0 என்று கரணவாய் கொலின்ஸ் விளையாட்டுக் கழகத்தையும் கலட்டு ஐக்கிய விளையாட்டுக்கழகம் அல்வாய்மனோகரா விளையாட்டுக்கழகத்தை 2:0 என்றும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்களுக்கு முன்னேறியுள்ளன.

அத்துடன் கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக்கழகம் வரணி யுத் விளையாட்டுக் கழகத்தையும் கலைமதி விளையாட்டுக் கழகம் வல்வெட்டி கருணாகரன் விளையாட்டுக் கழகத்தை தோற்கடித்தும் அடுத்த போட்டிகளிற்கு முன்னேற்றம் கண்டுள்ளன. நாளை ஏனைய போட்டிகள் நடைபெறவுள்ளன.