மின்னல் தாக்கி இளைஞர்கள் மரணம்

புத்தள, தல்வத்த வீட்டுத்திட்டம் 10 பிரதேசத்தில், கரும்பு வெட்டிக்கொண்டிருந்த இருவர் மரணமடைந்துள்ளனர்.
இவ்விருவரும் இன்று (13) கரும்பு வெட்டிக்கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பண்டாரவளை மற்றும் பதுளை பிரதேசத்தில் வசிக்கும் 19 மற்றும் 24 வயதான இரு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்