தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் .ஏ சுமந்திரன் சுமார் 140000 பனை  விதைகளை நடுகை செய்யவுள்ளார்.

ஒவ்வொரு பிரதேச செயலாளர்  பிரிவு ரீதியாக தலா 10 ஆயிரம் பனை விதைகள் 14 பிரதேச செயலகத்திலும் நடப்படவுள்ளன.

அதன் ஆரம்ப கட்டமாக, வடமாராட்சி, கிழக்கு,  கரவெட்டி மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் நேற்று முன்தினம் பனை விதைகள் நாட்டப்பட்டன.

கரவெட்டிப் பிரதேச செயலர் பிரிவில் கப்பூதூவிலும், வடமராட்சி கிழக்கில் செம்பற்று வடக்கிலும் பருத்தித்துறையில் வல்லிபுரம் பகுதியிலும் பனம் விதைகள்  இவ்வாறு நடப்பட்டன.