ஜெனீவா பிரேரணை தொடர்பில் விழிப்புணர்வூட்டும் தேசிய மாநாடு

ஜெனீவா பிரேரணைக்கு இணக்கம் வெளியிட்டமையினால் அரசாங்கம் நாட்டினைத் தீவிர ஆபத்து நிலைமைக்கு மூழ்கடித்துள்ளமையை இட்டு மக்களுக்கு விழிப்புணர்வூட்டும்  தேசிய மாநாடொன்று எதிர்வரும் 19ஆம் திகதி கொழும்பில் நடத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

கடந்த 09ஆம் திகதி பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்கட்சிக் கூட்டத்தில் இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இக் கட்சித் தலைவர் கூட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் எதிர்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி குமார வெல்கம மற்றும் டளஸ் அழகபெரும, மக்கள் ஐக்கிய முன்னணி தலைவர் தினேஷ் குணவர்தன, தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச, ஜயந்த சமரவீர, ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார, பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில, லங்கா சமசமாஜக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பிரதான செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணகே, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பிரதான செயலாளர் டீயு.குணசேகர ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.