கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பொதுமக்கள் தொடர்பு அதிகாரிகளாக இருவர் நேற்றையதினம் (07.10.2015) அமைச்சில் வைத்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் இந்த நியமனக்கடிதங்களை வழங்கி வைத்தார்.20151007_194042-1024x576

 

மன்னார் மாவட்ட பொது மக்கள் தொடர்பு அதிகாரியாக வாங்காளையினை சேர்ந்த மார்க்க அண்டனும், முல்லைத்தீவு மாவட்டபொது மக்கள் தொடர்பு அதிகாரியாக விஜின்தனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வில் முன்னாள் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர்பல் ரெவல் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்