கோவையில் 2500 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 2500 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிக்கபட்டுள்ளது.
பாண்டியங்குழி எனும் பகுதியில் கோவை பிஎஸ்ஜி கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் ரவி மற்றும் மாணவர்கள் அங்கு ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

அப்போது சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லால் ஆன கல்லறை இருப்பது தெரியவந்தது.

இதனை ஆராய்ந்தவர்கள் கூறுகையில், 2500ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் மக்கள் வசித்து வந்தது தெரியவந்துள்ளது.

அப்போது, இறந்தவர்களின் உடலை குழியில் போட்டு நான்கு பக்கமும் கற்களை அடுக்கி வைத்து சென்றுவிடுவதாக தெரிகிறது. அந்த உடல் பறவை மற்றும் விலங்குகளுக்கு உணவாகும்.

மேலும், இந்த மாதிரியான பழங்கால இடங்களையும், பழமையான கலையும் பாதுகாப்பது அவசியமாகும் என்று தெரிவித்துள்ளனர்.