காவல் நிலையத்தில் மது அருந்தி பொலிசாரிடமே ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்

மும்பையில் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் மது அருந்தி பொலிசாரிடமே ரகளையில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் 25 வயது இளம்பெண் ஒருவர், ஹொட்டல் ஒன்றின் முன்பு நள்ளிரவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அவரை அங்கிருந்து செல்லும்படி கூறியும் அவர் அதனை கேட்கவில்லை.

இதையடுத்து அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்த பொலிசார், அறிவுரை கூறியுள்ளனர்.

ஆனால் அவர் தனது கையில் பீர் பாட்டிலை வைத்துக்கொண்டு குடித்துக்கொண்டே இருந்துள்ளார்.

போதையில் இருக்கும் அவருக்கு என்ன சொன்னாலும் புரியாது என்பதால் அவரின் நடவடிக்கைகளை வீடியோ எடுத்த பொலிசார், காலையில் ரூபாய் 1,200 அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.