அவுஸ்திரேலியாவில் முன்னாள் காதலனின் வருங்கால மனைவியை கொலை செய்த இந்திய பெண்: 24 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய நீதிபதி

அவுஸ்திரேலியாவில் முன்னாள் காதலனின் வருங்கால மனைவியை படுகொலை செய்த இந்திய பெண்ணுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திர்ப்பளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் நிராஜ் தேவ். இவருக்கும் மனிஷா பட்டேல் என்ற பெண்ணுக்கு திருமண வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இதன் காரணமாக தேவ் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு மனிஷாவுடன் திருமணம் செய்யாமலேயே வாழ தொடங்கினார்.

இதன் காரணமாக மனிஷா கர்ப்பமானார். பின்னர் தேவ் கூறியதால் கர்ப்பத்தை கலைத்துள்ளார்.

இந்நிலையில் தேவ் இந்தியாவை சேர்ந்த பூர்வி ஜோஷி என்பவரை தான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் எனவே இனிமேல் தன்னிடம் பேச வேண்டாம் என்றும் மனிஷாவிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் மனிஷா மன ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டார். தனது நிலைக்கு பூர்வி தான் காரணம் என்றும் கருதினார்

இதற்கிடையில் தேவ்வை பார்ப்பதற்காக அவுஸ்திரேலியாவுக்கு பூர்வி வந்திருந்தார்.

அப்போது அங்கு சென்ற மனிஷா பூர்வியை கத்தியால் பயங்கரமாக குத்தி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மனிஷா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹெலன் வில்சன் மனிஷாவுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும்  2031ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு மனிஷா பரோலில் செல்லலாம் என்றும் கூறியுள்ளார்

இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.