ஷங்கருக்கு பிறகு விஜய் எடுக்கும் ரிஸ்க்

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்றால் ஷங்கர் தான். இவர் படம் வருகிறது என்றால், ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் எதிர்ப்பார்ப்பார்கள்.

இந்நிலையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த ஐ படம் தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் வெளிவந்தது. ஆனால், ஹிந்தியில் இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதே நிலையில் தெலுங்குப்படமான பாகுபலி வட இந்தியாவில் ரூ 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது புலி படமும் ஹிந்தியில் வெளிவரவுள்ளது, இப்படம் ஐ போல் ஆகுமா? இல்லை பாகுபலி ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.