வடக்கு முதல்வரின் அடுத்த அறிவிப்பு.

எங்கள் பிரச்சினைகள் அரசியல் ரீதியாகத் தீர்க்கப்படும் வரை எமது மக்கள் காத்துக்கொண்டிருக்க முடியாது. உரிய சட்டதிட்டங்களுக்கு ஏற்ப உள்நாட்டு வெளிநாட்டு எமது உறவுகளின் உதவியுடன் முன்னேறுவது தான் சிறந்தது.அரசியலானது மத்திக்கும் மாகாணத்துக்கும் இடையில் இடைவெளியை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

எமது அரசியல் யாப்பும் எமக்குப் போதிய அதிகாரங்களைவழங்கவில்லையென போட்டுடைத்துள்ளார் வடமாகாண முதலமைச்சர்க.வி.விக்னேஸ்வரன்.

துன்னாலை கோவிற்கடவை சனசமூக நிலையத் திறப்பு விழா வில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தன்கையே தனக்கு உதவி என்பதற்கேற்ப மக்கள் அரசையே எதற்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்காது தனியார் நிறுவனங்களுடனும் தனி மனிதர்களுடனும் சேர்ந்து முன்னேறுவதுதான் இன்றைய காலகட்டத்தில் உசிதமானது. காரணம் அரசியல். மக்கள் பங்களிப்புடன் ஆரம்பிக்கின்ற எந்தவொரு வேலைத் திட்டமும் தோற்றுப்போனதாகச் சரித்திரம் இல்லை.

எமக்குக் கிடைக்கம் நிதியும் மிகச் சொற்பமே. எமது வருமானத்தை அதிகப்படுத்த சட்டதிட்டங்களைத் தற்போது உருவாக்கி வருகிறோம். அங்கும் நியதிச் சட்ட திட்டங்களைஉருவாக்கக்கூடிய திறன் மிகுந்த அலுவலரின் பற்றாக்குறை எம்மைப் பாதித்துள்ளதென்றார்.

குறித்த சனசமூக நிலையம் சுமார் 8 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. அதனை முதலமைச்சர் இந்தியத் துணைத்தூதர் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.