ரசிகர்கள் செய்கிற குழப்பம்- அதிருப்தியில் விஜய், அஜித்?

இளைய தளபதி விஜய் தன் ரசிகர்களை மிகவும் மதிப்பவர். எந்த ஒரு சூழ்நிலையிலும் தன் ரசிகர்களை விட்டுக்கொடுக்காதவர்.

இந்நிலையில் நேற்று சிவகார்த்திகேயனை மதுரையில் தாக்கியது அஜித் ரசிகர்கள் தான் என்று ஸ்ரீகாந்த் டுவிட்டரில் கூறியதாக ஒரு கூறப்பட்டது. பின் விசாரிக்கையில் அது ஒரு போலி என்று தெரிய வந்தது.

இதே நபர் தான் வாலு படத்தின் போதும் அஜித்தை வைத்து உங்களை பிரபலப்படுத்தாதீர்கள் சிம்பு என கூறி, பெரிய பிரச்சனை வரை வந்து, பின் ஸ்ரீகாந்தே ’அது நான் இல்லை’ என்று கூறி முற்று புள்ளி வைத்தார்.

அஜித்தை மாட்டிவிட வேண்டும் என்றால், இதை எந்த ரசிகர்கள் செய்திருப்பார்கள் என்று சொல்ல தேவையில்லை, ஆனால், இதேபோல் சமயங்களில் அஜித் ரசிகர்களும் செய்துள்ளனர். ஆனால், இந்த விஷயம் அவர்கள் காதுகளுக்கு எப்போது தான் செல்லும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.