பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு எதிராகவும் கலப்பு நீதிமன்றம்

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைக்காக நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படும் கலப்பு நீதிமன்றத்தைப் போலவே, சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான கலப்பு நீதிமன்றம் ஒன்றையும் உருவாக்குமாறு கோரப்பட்டுள்ளது.

வடக்கு மற்றம் கிழக்கு மாகாணங்களின் மகளிர் அமைப்பொன்று இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அந்த அமைப்பினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் கொட்டதெனியாவயில் சேயா என்ற சிறுமியை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு பேரையும் இந்த மாதம் 28ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் கைதான குறித்த இரண்டு பேரும், சேயாவின் வீட்டுக்கு அருகில் வசிக்கின்றவர்கள்.

அவர்களில் ஏற்கனவே காவற்துறை தடுப்பில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த 17 வயது மாணவரும் உள்ளடங்குகிறார்.