ஜெனீவா அறிக்கைக்கு புலம்பெயர் அமைப்புகள் வரவேற்பு.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

இந்த அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுலாக்கும் வகையிலான தீர்மானத்தை, மனித உரிமைகள் ஆணைக்கழு நிறைவேற்ற வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

குறித்த அறிக்கையில் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை செய்வதற்கான சிறப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதையும் தாங்கள் வரவேற்பதாக, லண்டனில் இருந்து இயங்கும் உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மனிதாபிமானத்துக்கு எதிரான வன்முறைகள் குறித்து, முழுமையான உள்ளக பொறிமுறையினால் தீர்வை காண முடியாது.

இந்த நிலையில் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டதன் அடிப்படையில் விசேட கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை அமெரிக்காவைத் தளமாக கொண்டு இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இந்த அறிக்கையின் பரிந்துரைகளை வரவேற்றுள்ளது.

அத்துடன் இந்த அறிக்கையில் உள்நாட்டு விசாரணைகள் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளமை குறித்து, அந்த அமைப்பு மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.
யுத்தக்குற்றச் சாட்டுகள் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகள் எந்த வகையில் தீர்வைத் தராது.

அதேநேரம் ஐக்கிய நாடுகளின் உண்மைக்கும் நீதிக்குமாறு விசேட அறிக்கையாளர் குழுவுக்கு இலங்கையில் பூரணை பிரசன்ன அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையாளரின் கோரிக்கைக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வரவேற்பை தெரிவித்துள்ளது.