சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக ஏற்றுக்கொண்டு எதிர்க்கட்சியில் அமரும் மஹிந்த தரப்பு

எதிர்க்கட்சி தலைவர் பதவி பிரச்சினையை தீர்த்துகொள்ளும் வரையில், இரா.சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சியில் ஆசனம் பெற்றுகொள்ளவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான கலந்துரையாடலுக்கு பின்னரே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய நாளை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் ஆசனம் பெற்றுகொள்ளும் 46 பேரும் ஆர்.சம்பந்தனை எதிர்க்கட்சி தலைவராக உத்தியாகபூர்வமாக ஏற்றுகொள்ளவுள்ளனர்.

இவர்களுக்குள் சுதந்திரக் கட்சியில் 35 பேர் மற்றும் முன்னணியில் மேலும் 11 பேர் உள்ளடக்கப்படுவார்கள்.