ஐ.நா அலுவலகத்தை இலங்கையில் அமைக்க அரசாங்கம் அனுமதி மறுப்பு

போர்க்குற்ற விசாரணைகளுக்காக இலங்கைiயில் ஐ.நா மனித உரிமை பேரவையின் அலுவலகத்தை அமைப்பதற்கு, இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது.

ஐ.நா அறிக்கையின் பிரகாரம் இலங்கையில் கலப்பு சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தப்படுமிடத்து, அதற்கு ஐ.நா அலுவலகம் ஒன்றை அமைப்பது அவசியமாகியுள்ளது.

எனினும், இலங்கையில் ஏற்கனவே அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்தின் ஊடாக இப்பணிகளை முன்னெடுக்க முடியுமென தெரிவித்துள்ள அரசாங்கம், இது குறித்து ஐ.நா பேரவைக்கும் அறிவித்துள்ளது.

இலங்கையில் கலப்பு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க, கடும் கண்டனம் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.